தெற்கு கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர் ஜோஸ் மானுவேல் பேரெஸ். இவர் கடந்த ஆறு வருடங்களாக வனவிலங்குகளை சட்டவிரோதமாக நாடு விட்டு நாடு கடத்தி வந்திருக்கிறார். பேரெஸ் இதுவரை 1,700 விலங்குகளை ஹாங்காங், மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குக் கடத்தி வந்திருக்கிறார்.
முப்பது வயதான இந்தக் கடத்தல்காரரை, கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி சான் யசிட்ரோ நுழைவு துறைமுகம் பகுதியில் போலீஸார் கைதுசெய்தனர். போலீஸார் ஜோஸ் மானுவேல் பேரெஸை சோதனையிட்டபோது, அவர் தன்னுடைய மேல் சட்டை, பேன்ட் மற்றும் உடன் கொண்டுவந்திருந்த பைகளில் சுமார் 60 முதலைக் குட்டிகள், பாம்பு குட்டிகள் மற்றும் ஊர்வன உயிரினங்களை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
அதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், அவரை வனவிலங்கு கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைதுசெய்தனர்.
அவரை விசாரித்ததில், ஜோஸ் மானுவேல் பேரெஸ் தன்னுடைய சகோதரி உள்ளட்ட சிலருடன் சேர்ந்து வனவிலங்குகளை சட்டவிரோதமாக கடத்தி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் தங்கள் கடத்தலுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்திவந்திருக்கின்றனர்.
யுகடன் பாக்ஸ் ஆமைகள், மெக்சிகன் பெட்டி ஆமைகள் மற்றும் குட்டி முதலைகள் உள்ளிட்டவற்றை நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு $739,000-க்கு விற்பனை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பெரெஸ் தான் செய்த இரண்டு கடத்தல் சம்பவங்களை ஒப்புக்கொண்டிருக்கிறார். அதனால் ஒரு கடத்தல் சம்பவத்துக்கு 20 ஆண்டுகள் என்ற கணக்கில் 40 ஆண்டுகள் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
from International https://ift.tt/V2IM9G0
via
