அமெரிக்காவின் டெக்காஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பெண்கள் கடந்த புதன்கிழமை ஹோட்டல் ஒன்றில் இரவு சாப்பிட்டுவிட்டு அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் தங்களுடைய காரை எடுக்க வந்ததாகத் தெரிகிறது. அப்போது அங்கு வந்த அமெரிக்கப் பெண் ஒருவர், அவர்களைப் பார்த்து, ``இந்தியர்களை நான் வெறுக்கிறேன். இந்தியர்கள் சிறந்த வாழ்க்கையை விரும்புகிறார்கள்... அதனால் அவர்கள் அனைவரும் அமெரிக்காவுக்கு வருகிறார்கள். நீங்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்" என அமெரிக்க வாழ் இந்தியப் பெண்களிடம் வாக்குவாதம் செய்து, அவர்களை தாக்கியிருக்கிறார். மேலும், அவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
This is so scary. She actually had a gun and wanted to shoot because these Indian American women had accents while speaking English.
— Reema Rasool (@reemarasool) August 25, 2022
Disgusting. This awful woman needs to be prosecuted for a hate crime. pic.twitter.com/SNewEXRt3z
இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்தச் சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதையடுத்து, மாகாண போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், மெக்சிகோவை பூர்விகமாகக் கொண்ட எஸ்மரால்டா அப்டன் என்ற பெண்ணை, அமெரிக்க வாழ் இந்தியப் பெண்களை இனவெறி காரணமாக அவதூறாகப் பேசி, தாக்கிய குற்றத்துக்காக கைதுசெய்தனர்.
from International https://ift.tt/uE3RIsj
via
