அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்த நாட்டின் தேசிய கல்விச் சங்க விழாவில் கலந்துகொண்டார். பருவநிலை மாற்றம் குறித்து அங்குக் கூடியிருந்தவர்கள் இடையே உரையாற்றிக் கொண்டிருந்த அதிபர் ஜோ பைடன், திடீரென கூட்டத்திலிருந்த ஒரு பெண்ணை சுட்டிக்காட்டி பேச்சைச் சிறிது நேரத்துக்கு நிறுத்தினார்.
அதையடுத்து, அங்கிருந்தவர்களின் கவனம் மொத்தமும் பைடன் குறிப்பிட்ட அந்தப் பெண்ணின்மீது திரும்ப, பின்னர் மெதுவாகப் பேச்சைத் தொடர்ந்தவர் அந்தப் பெண்ணிடம், ``நீங்கள் எனக்கு ஹாய் சொல்ல வேண்டும்!" எனக் கூறினார். அதைத் தொடர்ந்து பேசிய பைடன், ``எங்கள் நட்பைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், சில ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
"She was 12 and I was 30."
— Townhall.com (@townhallcom) September 23, 2022
- Joe Biden pic.twitter.com/bmit4z9oqa
அப்போது அவளுக்கு வயது 12, எனக்கு 30. ஆனால், எப்படியிருந்தாலும் இந்தப் பெண் என் வாழ்க்கையில் மோசமான காரியத்தைச் செய்துமுடிக்க உதவியிருக்கிறார்" என முடித்துக் கொண்டார்.
பைடன் பேசியதைக் கேட்டு அங்குக் கூடியிருந்த அனைவரும் கூச்சலிட்டு ஆர்ப்பரித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வர, பைடனின் இந்தப் பேச்சை விமர்சித்தும், அவருக்கு ஆதரவாகவும் பலர் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
from International https://ift.tt/Ftvb9H2
via
