
முதல் சர்வதேச பொருளாதார ஒப்பந்தத்தைத் தொடங்கிய தாலிபன்கள்:
ரஷ்யாவுடன் பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் கோதுமை இறக்குமதி ஒப்பந்தத்தைத் தொடங்கியிருப்பதாக ஆப்கானிஸ்தான் வர்த்தக அமைச்சர் ஹாஜி நூருதீன் அஜிஸி தெரிவித்திருக்கிறார்.

புதிய நிதியமைச்சர்:
பாகிஸ்தானில் பொருளாதார மந்தநிலை நிலவிவரும் சூழலில், அந்த நாட்டின் புதிய நிதியமைச்சராக 47 வயதான ஈஷாக் தார் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

சவுதியின் பிரதமரானார் இளவரசர்:
சவுதி அரேபியாவின் இளவரசரான முகமது பின் சல்மான், அந்த நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், தென் கொரிய அதிபர் யூன்சுக்-யோல் இருவரும் வட கொரியாவின் ஆயுத சோதனைகள் மற்றும் அதைச் சார்ந்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இரான் போராட்டம்:
இரானில் ஹிஜாப்புக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கத் துருக்கி நாட்டைச் சேர்ந்த பாடகி மேடையில் அவர் தலைமுடியை வெட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகின் மிகப்பெரிய பம்ப் செய்யப்பட்ட (biggest pumped hydro scheme in the world) நீர்மின் திட்டத்தை ஆஸ்திரேலியா அரசு அறிவித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள குயின்ஸ்லாந்தில் இது அமைக்கப்படவிருக்கிறது.

ஐ.நா- இந்தியாவுக்கு இலங்கை ஆதரவு:
ஐ.நா சபையில் இந்தியாவின் நிரந்தர இடத்துக்கான கோரிக்கையை இலங்கை ஆதரித்திருக்கிறது. ஜப்பான், இந்தியாவின் நிரந்தர இடங்களுக்காக உதவ விருப்பம் தெரிவித்தார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க.

அமெரிக்கா- இயன் சூறாவளி:
அமெரிக்காவின் புளோரிடாவில் தீவிரமடையும் `இயன்' சூறாவளி... நான்காம் வகை புயல் கட்டத்தைத் தாண்டியதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்.

அமெரிக்காவைச் சேர்ந்த மலையேறும் வீராங்கனை ஹிலாரி நெல்சன், நேபாளத்தின் மநஸ்லூ மலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தற்போது அவர் உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

சுவிட்சர்லாந்தில் உருகும் பனிப்பாறைகள்:
சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத அளவுக்குப் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இந்த வருடத்தில் மட்டும் 6℅ பனிப்பாறைகள் உருகியிருப்பதாக சுவிட்சர்லாந்து பனிப்பாறை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது.
from International https://ift.tt/ClTGOzj
via
