அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹன்னா ஸ்டார் எஸ்ஸர். 20 வயது ஹன்னா கடந்த ஞாயிற்றுகிழமை வெளியில் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, விக்டர் அந்தோனி லூயிஸ் (43) என்பவர் எஸ்.யூ.வி காரில் ஒரு பூனையை துரத்திக்கொண்டே வந்ததாகக் கூறப்படுகிறது. இதை கவனித்த ஹன்னா, காரில் அவரை வழிமறித்து கண்டித்திருக்கிறார். அதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இதில் ஆத்திரமடைந்த ஹென்னா, வேகமாக காருக்கு திரும்பி யூ-டர்ன் எடுத்திருக்கிறார். பின்னர் வேகமாக காரை விக்டர்மீது மோதியிருக்கிறார். அதில் சம்பவ இடத்திலேயே விக்டர் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி பதிவுகள் மூலம், ஹன்னாவைக் கைதுசெய்தது. இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்துக்கு வந்தபோது ஹன்னா தரப்பு வழக்கறிஞர், ``விக்டர்மீது கொலைசெய்யும் நோக்கத்துடன் ஹன்னா கார் ஏற்றவில்லை. எதிர்பாராத விதமாகத்தான் அந்த விபத்து நடந்தது. அதற்கு முன்பு ஹன்னா, விக்டரை அறிந்திருக்கவில்ல" என வாதிட்டார்.
அதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஹன்னா தற்போது சிறையில் இருக்கிறார். இது கொலையாக இருந்தால் அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும். விபத்தாக இருந்தால் 1 மில்லியன் டாலர் அபராதத்துடன் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
from International https://ift.tt/Lu79KEq
via
