
அமெரிக்கப் பொதுச்செயலாளர் அன்டோனி ப்ளிங்கன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கருடன் தொலைபேசி வாயிலாக உக்ரைன்-ரஷ்யப் போர் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

தென் கொரியாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஜோ பைடன், ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் ஃப்யூமியோ கிஷிதா உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

சீனாவின் ராணுவ இலக்குகளை 2027-க்குள் நிறைவேற்றப் போவதாக சீன அதிபர் ஜி ஜின் பிங் தெரிவித்திருக்கிறார்.

தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகியிருப்பதனால் உக்ரைனுக்குச் செல்ல வேண்டிய தானியங்கள் தடைப்பட்டிருக்கின்றன.

பிரேசில் அதிபர் தேர்தலில் இடதுசாரி தலைவரும், முன்னாள் அதிபருமான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றிருக்கிறார்.

லெபனானில் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அந்நாட்டின் 89 வயது பிரதமர் மைக்கேல் ஆவோன் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார்.

கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சீனாவின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி நிலையத்தைவிட்டு அதிக அளவில் ஊழியர்கள் வெளியேறினர்.

தென் கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அந்நாட்டின் பிரபல நடிகரும் பாடகருமான லீ ஜியன் மரணம்.
from International https://ift.tt/U1SWFo2
via
