ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இன்னும் தொடர்ந்து வருகிறது. இரண்டு நாடுகளும் மோதிக்கொள்ளும் இந்தப் போரில், இதுவரை எவ்வித சமரசமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், உக்ரைன்மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
ரஷ்ய அதிபர் புதின் தனது படைகளைப் புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், உக்ரைனில் தனது படைகளை வலுப்படுத்த... அமெரிக்காவால் பயிற்சி அளிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் கமாண்டோக்களை ரஷ்ய ராணுவம் நியமிக்கத் தொடங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆப்கானிஸ்தான் கமாண்டோக்களைப் பணியமர்த்த ரஷ்யாவுக்கு இரான் உதவக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதற்கு உக்ரைன் மக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

20 ஆண்டுகளாக தாலிபன்களை எதிர்த்து அமெரிக்கப் படைகளுடன் இணைந்து ஆப்கன் படைகள் போராடியது. 2021-ல் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா திடீரென வெளியேறியது. அமெரிக்கா வெளியேறிய பின்னர், தாலிபன்கள் நாட்டைக் கைப்பற்றியதால், 20,000 முதல் 30,000 தன்னார்வ கமாண்டோக்களைக் கொண்ட இந்தப் படையில் சிலர் துன்புறுத்தலுக்கு பயந்து அண்டை நாடுகளுக்குச் சென்றுவிட்டனர். சிலர் அந்த நாட்டிலேயே பதுங்கிவிட்டனர்.
இவ்வாறு நாட்டுக்குள் பதுங்கிய, நாட்டைவிட்டு வெளியேறிய கமாண்டோக்களை வாக்னர் குழு மூலமாக ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான போரில் அணிதிரட்டி ஈடுபடுத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது. பல மாதங்களாக நீடித்து வரும் இந்தப் போரில், ரஷ்யா ஆப்கானிஸ்தான் கமாண்டோக்களை ஈடுபடுத்தினால் உக்ரைன் போர்க்களத்தில் அதிக தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
from International https://ift.tt/b7QEHDf
via
