தென் கொரியாவின் கியோங்கி மாகாணத்தில் ஒரு தம்பதி தங்களின் இறந்துபோன குழந்தையின் உடலை, பிளாஸ்டிக் கன்டெய்னரில் மூன்று ஆண்டுகளாக மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தென் கொரியாவில், பிறக்கும் குழந்தைகளுக்கு சுகாதார பரிசோதனை, குழந்தைகளின் பள்ளிக்கூட சேர்க்கை பற்றிய அடிப்படை ஆய்வு உள்ளிட்டவை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றன. இத்தகைய ஆய்வின் போதுதான், இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் அந்தத் தம்பதியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள், ``முதலில் அந்தக் குழந்தையின் தாயார், குழந்தை தொலைந்து போனதாக தெரிவித்தார். பின்னர் விசாரணையை தீவிரப்படுத்தியபோது, குழந்தையின் உடலை கணவருடன் சேர்ந்து மறைத்து வைத்ததாக அந்தப் பெண் ஒப்புக்கொண்டார்.
35 செ.மீ நீளமும், 24 செ.மீ அகலமும், 17 செ.மீ உயரமும் கொண்ட ஒரு பிளாஸ்டிக் கன்டெய்னரில் இறந்துபோன தங்கள் குழந்தையின் உடலை மறைத்து வைத்திருக்கின்றனர். இறந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். ஆனால், ஏன் குழந்தையை மறைத்து வைத்தார்கள்? ஒரு வேளை குழந்தையைக் கொலைசெய்து மறைத்து வைத்திருக்கலாம் என்ற கோணத்தில்... தம்பதியைக் கைதுசெய்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.
from International https://ift.tt/abd6uGp
via
