அமெரிக்ககாவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், சாக்ரமென்டோ கவுண்டியில் உள்ள குருத்வாராவில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கீர்த்தனை விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நூற்றுகணக்காக சீக்கியர்கள் கலந்துக்கொண்டனர். அப்போது இரு நபர்களுக்கு மத்தியில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அது சண்டையாக மாறி, இருவரும் மாறி மாறி சுட்டுக்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வு குறித்து பேசிய சாக்ரமென்டோ கவுண்டி ஷெரிப் அலுவலக செய்தித் தொடர்பாளர் சார்ஜென்ட் (Sacramento County Sheriff’s Office spokesman Sgt. Amar Gandhi) ,"குருத்துவாரா கோயில் வளாகத்தில் இரு ஆண்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. அது துப்பாக்கிச்சூடு வரை சென்றிருக்கிறது. இதில், அதில் ஒருவரை ஒருவர் மாறி மாறி சுட்டுக் கொண்டனர். சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய காவல்துறை, "துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்திருக்கின்றனர். இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் தனிப்பட்ட இருவரின் சண்டையால் ஏற்பட்டிருக்கிறது என முதல்கட்ட தகவலில் தெரியவந்திருக்கிறது. எனவே இந்த சம்பவத்துக்கு வெறுப்புணர்ச்சி காரணமல்ல என்பதும் தெரியவந்திருக்கிறது" என விளக்கமளித்திருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து பேசிய அமெரிக்க வாழ் சீக்கிய சமூகம்,"நகர் கீர்த்தனை அணிவகுப்பை சிதைக்க, சிலர் முயன்றது துரதிர்ஷ்டவசமானது. குற்றவாளி முழுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.
from International https://ift.tt/RgP3AEp
via
