
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 8 மாதங்களில் மட்டும், சுமார் 1000 சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டதாகத் Seismological Research Letters ஜெர்னல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானில் கயிர்பூர் என்ற இடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில் தீப்பிடித்தது. இதில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

புகழ்பெற்ற விளையாட்டு சேனலான ESPN -ன் தொகுப்பாளரான Marly Rivera, ஒரு நிகழ்ச்சியின் போது சக தொகுப்பாளரான Ivón Gaete -யிடம் தவறான வார்த்தைகள் பயன்படுத்தியிருக்கிறார். இதற்காக அவர் இந்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.

சூடானின் தலைநகரான கார்ட்டூமில், ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதலில் வான்வழித் தாக்குதல்கள் தொடங்கியிருக்கின்றன. இதுவரை, இந்த தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 512 ஆக உயர்ந்திருக்கிறது.

புகழ்பெற்ற 'ஜெரி ஸ்ப்ரிங்கர் ஷோ' என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், சின்சினாட்டியின் முன்னாள் மேயரான Jerry Springer காலமானார். அவருக்கு வயது 79.

அமெரிக்காவில் தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் வலுக்கட்டாயமாக, டாட்டூ குத்திய பெற்றோரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். குழந்தைகளை டாட்டூ போடத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க , உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் அறிவித்தப்படி, 1550 ஆயுத வாகனங்களையும், 230 டாங்குகளையும் வழங்கியிருப்பதாக நேட்டோவின் தலைவரான Jens Stoltenberg அறிவித்திருக்கிறார்.

புகழ்பெற்ற 'குவீன் ' இசைக்குழுவின் பாடகரும், பாடலாசிரியருமான ஃபிரெடி மெர்குரியின் 'ஷார்ட்பேண்ட்ஸ்' (Hotpants) ஒன்று ஏலத்தில் சுமார் 18000 பவுண்டுகளுக்குப் பிரிட்டனில் விற்கப்பட்டது.

1703-ல் தொடங்கப்பட்ட உலகின் பழமையான நாளிதழ்களில் ஒன்றான Wiener Zeitung, அதன் அச்சு பதிப்பகத்தை நிறுத்திவிட்டு, இணையவழி சேவையைத் தொடங்க முடிவெடுத்திருக்கிறது. இதுவே உலகின் பழமையான நாளிதழ் ஆகும்.

இரண்டாம் உலகப் போரின்போது, நாசி முகாம்களில் காவலாளியாக இருந்த Josef Schuetz தன்னுடைய 102 வயதில் காலமானார். கடந்த ஆண்டு தான், இவரின் போர்க் குற்றங்களுக்காக ஐந்து வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
from International https://ift.tt/egWbtv0
via
