
நீண்ட தூரம் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை, 2025-ம் ஆண்டிற்குள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப் போவதாக ஆஸ்திரேலியா அறிவித்திருக்கிறது.

சீன அதிபர் ஜி ஜிங்க் பிங், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் குரங்கு அம்மை நோயினால் முதல் நபர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில், குடியரசு கட்சியின் தேசிய குழு பைடனை கடுமையாக விமர்சித்திருக்கிறது.

அமெரிக்காவிலிருந்து பல அணுசக்தி ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் முதன்முறையாகத் தென் கொரியாவுக்கு அனுப்பப்படுகிறது. வட கொரியாவின் கடும் நெருக்கடிக்கு மத்தியில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

முதன்முறையாக உலக ஆயர்கள் மாமன்றத்தில் (bishops meeting) பெண்களும் வாக்களிக்க போப் பிரான்சிஸ் அனுமதி வழங்கியிருக்கிறார். பெண்களுக்கு அதிக அளவில் முடிவெடுக்கும் பொறுப்புகள் அளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது எனக் கூறப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் ஜீன் கோரல், ட்ரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருக்கிறார்.

இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதியும், வடமேற்கு மாகாண ஆளுநருமான அட்மிரல் வசந்த கரன்னகொட, அவரின் மனைவி, அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்திருக்கிறது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இனி தீபாவளி பண்டிகையன்று விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
from International https://ift.tt/y3gvFuW
via
