அமெரிக்காவின் பிலடெல்பியா (Philadelphia) மாகாணத்தில் வசிப்பவர் ஜூட் சாக்கோ (Jude Chacko) (21). கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் குடும்பம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்திருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் படித்துக்கொண்டும், பகுதி நேரம் வேலை பார்த்து வந்த ஜூட் சாக்கோ, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
இது குறித்த தகவலை, துபாயின் தினசரி ஆங்கில செய்தித்தாளான க்லீஜ் டைம்ஸ் (Khaleej Times) வெளியிட்டிருக்கிறது. அதில், கொள்ளை முயற்சியின்போது, அவர் வழிப்பறிக் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
இதற்கு முன்னர், அமெரிக்காவின் ஓஹியோவிலுள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்துவந்த ஆந்திராவைச் சேர்ந்த சாயேஷ் வீரா (24) என்பவர், கடந்த ஏப்ரல் 21 அன்று, பணியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்திருந்தது. மேலும், குற்றவாளிகளின் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தது. கடந்த ஐந்து மாதங்களில் இந்தியர்கள் குறிவைத்துக் கொல்லப்படும் இரண்டாவது சம்பவம் தற்போது நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
from International https://ift.tt/Fc5wXCQ
via
