அன்பில் மகேஸ்: எகிறிய திமுக எம்எல்ஏ... கட்சி கூட்டத்தில் களேபரம்..!
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஸ், எம்.பி பழநிமாணிக்கம், எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதில் மைக்கைப் பிடித்த பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார், எடுத்த எடுப்பிலேயே, "அதிகாரிகள் சொல்வதுதான் கட்சியில் நடக்கிறது. பல நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு அவசரகதியில் தொகுதிக்குள் வரும் அமைச்சர், நிர்வாகிகளிடத்தில் முகம் கொடுத்துப் பேசுவதில்லை" என்றிருக்கிறார்.
இதனையடுத்து அவரைப் பேசவிடாமல், எம்.பி பழநிமாணிக்கம் தடுக்க முயல, அசோக்குமார் ஆதரவாளர்கள் பதிலுக்கு கூச்சலிட ஒரே களேபரம்...
தொடர்ந்து அசோக்குமார் பேசிய பேச்சுக்கு அன்பில் மகேஸின் ரியாக்சன்,
கெஞ்சிய பழனிமாணிக்கம்... என
திமுக கூட்டத்தில் நடந்த பரபரப்பான நிகழ்வுகளின் முழுமையான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...
மிஸ்டர் கழுகு: எழுதி வாங்கிய தாமரைத் தலைவர்!
கலங்கும் அ.தி.மு.க சூப்பர் சீனியர்!
"ஜெயலலிதா காலத்தில் பலமுறை எம்.பி-யாக இருந்த அ.தி.மு.க-வின் சூப்பர் சீனியர் அவர். சொல்லப்போனால், எடப்பாடி பழனிசாமியே அவருக்கு `தம்பி' எனும் அளவுக்கு ஏழு வயது மூத்தவர். அ.தி.மு.க-வின் டெல்லி முகமாக அறியப்படும் அவரை, சமீபகாலமாக ரொம்பவே ஓரங்கட்டுகிறாராம் எடப்பாடி.
'டெல்லியிடம் காம்ப்ரமைஸ் பேசுவதற்கு மட்டும் என்னைப் பயன்படுத்துகிறாரே?' என்ற அவரது அதிருப்திக் குரல், எடப்பாடியின் காதுக்கும் போயிருக்கிறதாம்!
இன்று வெளியான Vikatan Plus இதழில் மிஸ்டர் கழுகு தரும் மேலும் பல அரசியல் சீக்ரெட் செய்திகள்...
* அமைச்சருடன் மல்லுக்கட்டும் மேயர்... நாள் குறித்த அறிவாலயம்!
* மருமகனால் வந்த தொல்லை... ரங்கசாமி எடுத்த முடிவு!
* எழுதி வாங்கிய தாமரைத் தலைவர்!
* 'நீ யாருன்னு எனக்குத் தெரியும்...' - வாக்கி டாக்கியில் மல்லுக்கட்டிய காக்கிகள்!
அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...
மேலும்,
"என்னை அரியணையில் ஏற்றினால் 150 வயது வரை வாழும் ரகசியம் சொல்வேன்..!" - சரத்குமார்
கெஜ்ரிவாலை ஆதரிக்க ராகுல் தயங்குவது ஏன்?! - டெல்லி அரசியல் பின்னணி
'டெல்லி மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்' என எதிர்க்கட்சித் தலைவர்களை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துவருகிறார்.
ஆனால், அவருக்கு காங்கிரஸ் தரப்பில் இதுவரை தேதி ஒதுக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தயக்கம் கட்டுவதன் பின்னணி என்ன..?
சொகுசு பங்களா, கார், ஆடம்பர வசதிகள் இலவசம்... சீனாவின் சூப்பர் வில்லேஜ்!
சீனாவில் உள்ள Huaxi என்ற கிராமம், `கிராமப்புறம் என்றால் இப்படித்தான் இருக்கும்' என்று நீண்ட காலமாக நிலவி வந்த பழமையான கற்பனைகளை தகர்த்து.. அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
சீனாவின் ஷாங்காய் பகுதியில் இருந்து இரண்டு மணி நேர பயணித்தில் உள்ளது Huaxi கிராமம். இது 1960-ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டியின் முன்னாள் செயலாளரான வு ரென்பாவோ என்ற தலைவரால் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...
IPL Round Up: ரயில்வே ஸ்டேஷனில் தங்கிய ரசிகர்கள்..!
அகமதாபாத் ஐபிஎல் 2023 சீசனின் இறுதிப் போட்டி நேற்று நடைபெறவிருந்தது. ஆனால், இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததால், ஆட்டம் நடைபெறவில்லை. இதனால் போட்டி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
பல ஊர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இப்போட்டியைக் காண்பதற்காக ரசிகர்கள் வந்திருந்தனர். போட்டி ரத்து செய்யப்பட்டதால், ரசிகர்கள் பலர் அகமதாபாத் ரயில்வே ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர்.
நேற்றைய ஆட்டத்தின் சுவாரஸ்ய சம்பவங்களின் முழு தொகுப்பையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...
வீட்டுக் கடன்: சம்பளத்தில் எத்தனை சதவிகிதம் இருக்கலாம்?
நம்மில் பெரும்பாலானோர் வீட்டுக் கடன் மூலம்தான் வீடு, அடுக்குமாடி குடியிருப்பை வாங்குகிறோம். சொந்தமாக இடம் இருந்தாலும் அதில் வீடு கட்ட வீட்டுக் கடன் வாங்குகிறோம்.
இந்த நிலையில், வீட்டுக் கடன் மாதத் தவணை சம்பளத்தில் எத்தனை சதவிகிதம் இருக்கலாம்?
கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால், அப்போது வீட்டுக் கடன் மாதத் தவணை எத்தனை சதவீதம் இருக்கலாம்..?
வீட்டுக் கடன் மாதத் தவணை தொடர்பான பக்கா விதிமுறைகளை விவரிக்கிறார் நிதி ஆலோசகர் ஆர்.வெங்கடேஷ்...
"பாராசிட்டமால் மருந்து கல்லீரல் பாதிப்பை உண்டாக்குமா?''
கொரோனாவின் பிடியில் நாமெல்லாம் சிக்கித் தவித்த நேரத்தில், ஆபத்பாந்தவனாகத் திகழ்ந்தன பாராசிட்டமால் மாத்திரைகள்.
அதன் பின்னர், காய்ச்சல் வந்தால், பலரும் பாராசிட்டமால் மாத்திரைகளைப் பயன்படுத்துவது சர்வ சாதாரணமாகிவிட்டது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே? இதே கதைதான் பாராசிட்டமால் விஷயத்திலும்.
இந்த நிலையில், அதிக அளவில் பாராசிட்டமால் மருந்தை எடுத்துக்கொள்ளும்போது, கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்படும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.
பாராசிட்டமால் குறித்த அவரது எச்சரிக்கைகளை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...
'பாலு மகேந்திரா... மணிரத்னம்...' - கதைக்கும் நடிகை ரோகிணி
ஆனந்த விகடன் யூ-டியூப் சேனலில் `கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா' நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகள் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில், திரைக்கலைஞர் ரோகிணி பங்கேற்று திரைத்துறைக்குள் வந்தது எப்படி?, பாலுமகேந்திராவுடன் வேலை பார்த்த அனுபவம், டப்பிங் கலைஞராக இயக்குநர் மணிரத்னம் படங்களில் பணியாற்றிய அனுபவம் உள்பட பேராசிரியர் பர்வீன் சுல்தானாவின் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார்...
ரோகிணியின் விரிவான பேட்டியை படிக்க இங்கே க்ளிக் செய்க...
மேலும்,
Ayalaan Exclusive: இந்த வாரம் வெளியாகிறதா 'அயலான்' டீசர்? இயக்குநர் ரவிக்குமார் சொல்லும் அப்டேட்!
from International https://ift.tt/LAwtnza
via
