சீனாவில் தன்னுடைய பெற்றோருக்கு முழுநேர மகளாக இருக்க 4,000 யுவான் பெறுவதாக சமூக வலைதளங்களில் ஒரு பெண் பதிவிட்டிருக்கிறார். இது குறித்து வெளியான செய்தியில், ``சீனாவைச் சேர்ந்த நியானன் என்ற 40 வயதுப் பெண் ஒரு செய்தி நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றிவந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த ஆண்டு அவரின் பணியில் சில மாற்றங்கள் நடந்ததால், அவரால் பணியைச் சிறப்பாக மேற்கொள்ள முடியவில்லை. அதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார்.
இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு உதவ அவரின் வயதான பெற்றோர் முடிவுசெய்திருக்கின்றனர். இது குறித்து தன்னுடைய மகளிடம், `நீ உன் வேலையை விட்டுவிடலாமே... எங்களுக்குத் துணையாக இரு... நாங்கள் உன்னைப் பொருளாதாரரீதியில் கவனித்துக்கொள்கிறோம். மாதம் 4,000 யுவான் (ரூ.47,000) தருகிறோம். உனக்குப் பொருத்தமான வேலை கிடைத்தால், நீ அதற்குச் செல்லலாம். உனக்கு வேலை செய்ய விருப்பமில்லையென்றால், வீட்டிலேயே எங்களுடன் நேரத்தைச் செலவிடு' எனக் கூறியிருக்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து, அவர்களின் மகளும் அவர் செய்துவந்த பணியை விட்டுவிட்டு பெற்றோருக்கு உதவியாக இருந்துவருகிறார். இது குறித்து அந்தப் பெண், `நான் செய்துவந்த பணியை விட்டுவிட என் பெற்றோர் வலியுறுத்தினர். மேலும், அவர்களுக்கு உதவியாக இருந்தால் அவர்களுக்கு வரும் உதவித்தொகையான 10,000 யுவானிலிருந்து மாதம் 4,000 யுவான் எனக்குச் சம்பளமாகத் தருவதாகவும், வேறு வேலைக்குச் செல்ல வேண்டுமென விரும்பினால் சென்றுகொள் எனவும் கூறினார்கள். இந்தப் பணியை ஏற்றுக்கொண்டு தினமும் காலையில் என்னுடைய பெற்றோருடன் ஒரு மணி நேரம் நடனமாடுகிறேன்.
ஷாப்பிங் செல்ல விரும்பினால் அவர்களுடன் செல்கிறேன். மாலையில், என்னுடைய தந்தையுடன் சேர்ந்து இரவு உணவு சமைக்கிறேன். எலெக்ட்ரானிக் தொடர்பான அனைத்துப் பணிகளையும் நிர்வகிக்கிறேன். டிரைவராகவும் இருக்கிறேன். மாதாந்தரப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்கிறேன். என்னுடைய பெற்றோருடன் இருப்பதை நான் மனநிறைவாக உணர்கிறேன். என்னுடைய பணியின்போது அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைதான் எனக்கு மிகப்பெரிய மன அழுத்தமாக இருந்தது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
from International https://ift.tt/jJqBHnS
via
