
டெக்ஸாசில் ஐஸ்க்ரீம் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 பவுண்டு போதைப்பொருளை அமெரிக்க அதிகாரிகள் கைப்பற்றியிருக்கின்றனர்.

அமெரிக்காவில் உள்ள ஸ்டார்பக்ஸ் (Starbucks) நிறுவனத்தில் பணிபுரியும் 3000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். LGBTQ+ மக்களை ஆதரிக்கும் விதமான "Pride Month" கொண்டாட்டங்களுக்கு அந்நிறுவனம் ஒப்புதல் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஸ்வீடனில் பொழுது போக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து அந்நிறுவன சி.இ.ஓ, `இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடைபெறுகிறது. ஒரு வாரத்துக்கு பூங்கா மூடப்பட்டிருக்கும்'' என்று தெரிவித்தார்.

தென் கொரியாவில், பொருளாதார நெருக்கடியால், தனது இரண்டு பிள்ளைகளைக் கொன்று பல ஆண்டுகளாக ஃப்ரீசரில் வைத்திருந்தப் பெண்ணைக் கைதுசெய்திருக்கின்றனர்.

ரஷ்யாவில் வாக்னர் படையால் ஏற்பட்டிருக்கும் குழப்பம் உக்ரைனுக்குச் சாதகமாகச் செயல்படுகிறது என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மேன் vs வைல்ட் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ், தனது நிகழ்ச்சிக்கான அடுத்த விருந்தினர் குறித்து ஹிண்ட் கொடுக்கும் விதமாக, அவர் லுங்கியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

ஓஷன் கேட் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளான வழக்கை அமெரிக்கக் கடலோரப் படையினர் விசாரிக்கவிருக்கிறது.

பாகிஸ்தான் அரசு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடனான ஒப்பந்தத்தை நிறைவேற்ற, அடுத்த நிதியாண்டின் வரியை உயர்த்த திட்டமிட்டிருக்கிறது.

நீர்மூழ்கிக் கப்பலில் தனது மகனுடன் உயிரிழந்த பாகிஸ்தானிய பில்லியனர் ஷாஜதா தாவூத்தின் மனைவி கிறிஸ்டின் தாவூத், இறப்பிற்கு முந்தைய இறுதி தருணங்களை பத்திரிகைக்கு பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்காவில், அலாரம் தொந்தரவாக இருக்கிறது என்று ஆய்வக ப்ரீசரை நிறுத்திய தூய்மை தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்நிறுவனம் ரூபாய் 8 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்திருப்பதாக வழக்கு தொடர்ந்திருக்கிறது.
from International https://ift.tt/TAvBfYN
via
