அமெரிக்காவின் ஓஹியோ நகரைச் சேர்ந்தவர், 31 வயதான கிரிஸ்டனில் கேண்டலேரியோ. இவர் தன்னுடைய ஜெயின் என்ற 16 மாதக் குழந்தையை, வீட்டில் தனியாக விட்டுவிட்டு 10 நாள்கள் விடுமுறைக்குச் சென்றிருக்கிறார். தனியாக விட்டது மட்டுமல்லாமல், அந்தக் குழந்தையை கவனித்துக் கொள்ள யாரையும் அவர் நியமிக்கவில்லை.
10 நாள்கள் கழித்து அவர், ஜூன் 16 அன்று வீடு திரும்பியபோது, வீட்டில் அந்தக்குழந்தை சுயநினைவின்றி இருந்துள்ளது. காயங்கள் ஏதும் ஏற்படவில்லை; ஆனால், சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தது.
இது குறித்து காவல்துறை அதிகாரிகளின் வாக்குமூலத்தில், ``Puerto Rico மற்றும் Detroit ஆகிய நகரங்களுக்கு இப்பெண் சென்றிருக்கிறார். அந்தக் குழந்தையை வீட்டின் உள்ளே யாருடைய கவனிப்புமின்றி விட்டுச் சென்றுள்ளார்.
வீட்டிற்கு வந்ததும், மகளின் நிலையைப் பார்த்ததும் பதறியவர், 911 உதவி எண்ணை கிரிஸ்டனில் கேண்டலேரியோ அழைத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போது, படுக்கையிலேயே குழந்தை சிறுநீர் மற்றும் மலம் கழித்திருப்பதை அதிகாரிகள் பார்த்தனர்'' என குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து அண்டை வீட்டார் கூறுகையில், `கேண்டலேரியோ தன்னுடைய குழந்தையை வீட்டில் தனியாக விட்டுப்போவது இது முதல்முறையல்ல. நாங்களும், சுற்றியுள்ளவர்களும், குழந்தையை இப்படி தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என பலமுறை கூறியுள்ளோம். ஆனால் அவர் எப்போதும் குழந்தையைத் தனியாகவே விட்டுச் செல்வார்' என்றனர்.
கேண்டலேரியோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜூன் 28 அன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது குழந்தையை 10 நாள்கள் வரை, வீட்டில் தனியாக விட்டுவிட்டு, விடுமுறையைக் கழிக்க தாய் சென்ற சம்பவம், சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாகி உள்ளது.
from International https://ift.tt/jhd6Wzq
via
