அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், 19 வயது இளைஞர் ஒருவர் டால்பினை புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதாக திட்டமிட்டிருந்தார். இதனால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு அதிக லைக்குகள் கிடைக்குமென ஆசையில் இருந்திருக்கிறார். இதையடுத்து ஃப்ளோரிடாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள அமிலியா தீவுக்கு சென்றிருக்கிறார். அப்போது, டால்பினை தண்ணீரில் இருந்து வெளியே இழுத்து புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது. அந்தச் சிறுவன் டால்பினை தண்ணீரிலிருந்து வெளியே இழுத்து புகைப்படம் எடுத்த, ஓரிரு தினங்களில் டால்பின் உயிரிழந்திருக்கிறது. இதையடுத்து ஃபுளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பும், தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகமும் விசாரணையில் ஈடுபட்டிருக்கிறது.
ப்ளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் அறிக்கை படி, ``புகைப்படத்தில் டால்பின் வீங்கிய நிலையிலும், அதன் வாயிலிருந்து ரத்தம் வெளியேறியதும் பதிவாகியிருக்கிறது. மேலும் அவர், புகைப்படம் எடுத்த பின்னரே இந்த மாற்றம் ஏற்பட்டிருக்க கூடும் அல்லது இதற்கு முன்னதாகவே டால்பின் இறக்கும் தருவாயில் இருந்திருக்கலாம், தண்ணீரை விட்டு வெளியே இழுத்ததால் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்க கூடும்.

இது குறித்து 19 வயது இளைஞர், ``இது தானாக ஏற்பட்ட விபத்து. கரையில் இருந்து ஒரு டால்பினைப் பிடிப்பது வாழ்நாளில் ஒரு முறை தான் நடக்கும்'' என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். இருப்பினும் இளைஞரின் இந்த செயல் வரவேற்கத்தக்கது அல்ல என்று சமீக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் இளைஞரின் இந்த செயல் `இயற்கைக்கு எதிரான குற்றம்' என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from International https://ift.tt/Yhbl1jg
via
