அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், பசடேனாவில் 'ஜூவல்ஸ் ஆன் லேக்' (Jewels on Lake) என்ற நகைக்கடை இருக்கிறது. இதன் உரிமையாளர் பெயர் சாம் பாபிகியன். மூன்று முகமூடிக் கொள்ளையர்கள் தன்னுடைய கடைக்குள் புகுந்து தன்னைத் தாக்கிவிட்டு, நகைகளையும் கொள்ளையடுத்துவிட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார் சாம் பாபிகியன் (Sam Babikian). இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நகைக்கடையின் உரிமையாளர் சாம் பாபிகியன் இந்தச் சம்பவம் குறித்து, ``செவ்வாய்க்கிழமை மதியம் 1:45 மணியளவில் கையுறை அணிந்த மூன்று முகமூடிக் கொள்ளையர்கள் என்னுடைய கடைக்குள் நுழைந்து என்னைத் தாக்கிவிட்டு, என் கண், தொண்டை, வாய் ஆகிய பகுதிகளில் பெப்பர் ஸ்ப்ரேவை தெளித்தனர். அடுத்து என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. எப்படியோ தட்டுத் தடுமாறி நான் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துவிட்டேன். இந்தச் சம்பவத்தில் கொள்ளையர்கள் கடையை உடைத்து சுமார் மூன்று நிமிடங்களில், அரை மில்லியன் டாலர் மதிப்புள்ள நகைகளைத் திருடிச் சென்றனர்.

அவர்கள் கையில் சுத்தியல் வைத்திருந்தனர். அளவுக்கு அதிகமான பொருள்களைத் திருடிச் சென்றுவிட்டனர். பெரும்பாலான ஷோகேஸ்கள் காலியாக இருக்கின்றன. இந்தச் சம்பவம் எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் என்னைத் துன்புறுத்தவில்லை, என்னிடம் சண்டையிடவில்லை. எனக்கு எதுவும் நடக்காததற்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.
நகைக்கடையின் உரிமையாளர் மீது பெப்பர் ஸ்ப்ரே தெளித்துவிட்டு, சுமார் 5,00,000 டாலர் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. நகைக்கடை உரிமையாளருக்கு மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சை அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from International https://ift.tt/4SEPvR0
via
