டெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் 9 ,10 ஆகிய தேதிகளில் `G20' மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் 25 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதில் கலந்துகொள்ளும் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், டெல்லி அரசும், மத்திய அரசும் தீவிரமாகத் தயாராகிவருகின்றன. இதற்கிடையில், `G20' உச்சி மாநாட்டில், ரஷ்ய அதிபர் புதின் கலந்துகொள்ள மாட்டார் என்றும், அக்டோபர் மாதம் சீனாவில் நடைபெறவிருக்கும் `One Belt One Road forum' என்ற மாநாட்டில் பங்கேற்க அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் தகவல் வெளியானது.
இந்த நிலையில். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் `G20' மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் சீனாவின் நிலையான வரைபடத்தின் 2023 பதிப்பை சீன அமைச்சகம் வெளியிட்டது. அதில், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பகுதி முழுவதும் சீனாவின் எல்லைக்குள் இருப்பதாக அந்த வரைபடமானது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் இரண்டு நாடுகளுக்கு மத்தியில் விவாதத்தைத் தொடங்கியது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு, `அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதால், இத்தகைய முயற்சிகள் உண்மையை மாற்றாது. வரைபடத்தின் மூலம் ஆக்கிரமிப்பைக் காட்டும் மனப்பான்மையை 1949-ம் ஆண்டு முதல் சீன அரசு முன்னெடுத்து வருகிறது. அதில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள் சீனாவுக்குச் சொந்தமானதாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, சீனாவின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம்' எனத் தெரிவித்தது. இந்த நிலையில்தான் `G20' மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளமாட்டார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அவருக்கு பதிலாக சீன தூதர் ஒருவரும், `G20' நாடுகளின் சீன அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவரும் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from International https://ift.tt/YRu19hm
via
