வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
அமெரிக்காவில் "கனெக்டிகட்" என்ற பகுதியில் என் மகளின் வீடு அமைந்திருக்கிறது.அவர்கள் அந்த வீட்டை வாங்கி நான்கு வருடங்களாகிறது. நாங்கள் இந்த கோடை விடுமுறைக்கு சென்று வந்தோம். அப்போது நான் ரசித்த விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வீடு அமைந்திருக்கின்ற இடம் ஒரு சிறிய மலைப் பகுதி. ஒவ்வொரு வீடும் 2 ஏக்கர், 3 ஏக்கர் ,5 ஏக்கர் என்ற முறையில் பிரிக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கிறது. வீட்டை சுற்றியும் பரந்த புல்வெளியும், சுற்றிலும் மரக்கூட்டங்களுடனும் அமைந்திருக்கிறது.
சிறிய ஓடை ஒன்று எல்லாக் குடியிருப்புக்குள்ளும் நுழைந்து தனது பாதையில் ஓடுகிறது. ஒவ்வொரு வீட்டின் முன்புறமாகவோ, பின்புறமாகவோ, ஓடையின் பாதை செல்கிறது.இது எப்படி இவ்வளவு சுதந்திரமாக ஓடுகிறது? யாரும் அடைக்க மாட்டார்களா? என்று மகளை வினவினேன். ( நம்ம ஊரில் , பெரிய ஏரி,குளங்களை எல்லாம் இருக்கிற இடம் தெரியாமல் மாற்றி அமைத்த வரலாறு படைத்தவர்கள் அல்லவா நாம்! ). அது 50,60 வருடங்களுக்கு மேலாக அப்படியே தான் சென்று கொண்டிருக்கிறது.
அதனை யாரும் மாற்றமுடியாது, அதுமட்டுமா ஒரு மரத்தை கூட டவுன்ஷிப்பில் அனுமதி இல்லாமல் வெட்டக்கூடாது. இங்கே பழமை மாறாமல், இயற்கை சூழலை மாசு படுத்தாமல் இருக்க வேண்டும் என்று புது குடியிருப்புக்களோ, காம்ப்லெக்ஸ் போன்றவை கட்டுவதற்கு கூட அனுமதி இல்லை என்று மகள் விளக்கினாள்.
மலைப்பகுதி என்பதால் மான் கூட்டங்களும், பலவகையான பறவை வகைகளும் சுதந்தரமாக வலம் வருகின்றன. அவ்வப்போது சிறு நரிகளும், சிப்மங்(chipmunk) என்று அழைக்கப்படுகின்ற அணில்கள்,காட்டு முயல்கள் சுதந்தரமாக திரிகின்றது.
அனைத்தையும் விட ஒருமுறை ஒரு தாய்க்கரடி கூட தன் குட்டிகளுடன் எங்கள் இருப்பிடத்திற்கு வருகை புரிந்தது. நாங்கள் தான் அதனை கண்டு பயந்தோம். ஆனால் கரடியின் கழுத்தில் காலர் மாட்டியிருக்கிறார்கள். அதனை கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
நாம் அதை எதுவும் செய்யக்கூடாது அதுவே சென்று விடும் என்று மகள் கூறினாள். அதனையும் அப்பகுதி மக்கள் நாங்கள் இங்கே பார்த்தோம் , இந்த ரோட்டில் சென்று கொண்டிருக்கிறது என்று வலைதளங்களில் பதிவிட்டு எச்சரிக்கிறார்கள், மகிழ்ச்சியும் அடைகின்றனர்.
நாங்களும் எங்கள் புல்வெளியில் தினமும் உலாவருகின்ற வான்கோழி குடும்பங்களையும், தேன்சிட்டுகள்,கார்டினல், ப்ளூ ஜே என்று பலவகையானா பறவைகளை கண்டும், அவற்றின் கானங்களையும் கேட்டும் ரசித்தோம்.
ஆனால் எல்லாமே இந்த மூன்று , நான்கு மாதங்களுக்கு தான். அடுத்து குளிர் காலம் ஆரம்பிக்கும், பனிப்பொழிவில் மரங்கள் இலை உதிர்த்து மொட்டையாகிவிடும். எந்த விலங்குகளையும், பறவைகளையும் நாம் காணமுடியாது. அடுத்த கோடைகாலம் வரும் வரை அவற்றின் வருகைக்காக நாம் காத்திருக்கவேண்டும் என்று மகள் கூறினாள்.
அன்புடன்,
லதா தாஸ்
கோவை
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
from International https://ift.tt/STAXj6N
via
