சீனாவில், வறுமையின் காரணமாக அறுவை சிகிச்சைக்கு வழியின்றி 60 ஆண்டுகளாகத் தன் வயிற்றில் இறந்த சிசுவை சுமந்து வந்த பெண்ணுக்கு, அவரது 92 வயதில், அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்தவர் ஹுவாங் யிஜுன் என்ற பெண்.1948-ல் அவருக்கு 31 வயதானபோது கருவுற்று இருக்கிறார். ஆனால், அந்தக் கருவானது, கருப்பைக் குழாக்கு வெளியே ஒட்டிக் கொண்டிருந்துள்ளது.
இதனால் அந்தக் கரு அடி வயிற்றுப் பகுதியில் வளரும் சூழல் ஏற்பட்டது. இது போன்ற கரு வளர்ச்சியை மருத்துவ உலகில், எக்டோபிக் கர்ப்பம் (ectopic pregnancy) என்று கூறுவதுண்டு.
இத்தகைய சூழ்நிலையில் வளரும் கரு, பிரசவிக்கும்போது 21% குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளதாகவும், தாய் மற்றும் குழந்தை இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் எனவும் அப்போது பரிசோதித்த மருத்துவர்கள், ஹுவாங்கிடம் தெரிவித்துள்ளனர்.
எனினும், ஹுவாங் அதைப் பொருட்படுத்தவில்லை. அதே நேரம், கரு வளர்ச்சியடைந்து, வெளியேற முடியாமல் வயிற்றிலேயே சிசு இறந்தது. இதனை அறுவை சிகிச்சை மூலமாக அகற்ற, அப்போது இந்திய மதிப்பில் 12,500 ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், பணமில்லாததால் ஹுவாங்கின் குடும்பத்தினர் இதற்கு முன்வரவில்லை.
In 1948, Huang Yijun, a 31-year-old Chinese woman, discovered that she was pregnant. She went to the doctor, who informed her that the fetus was growing outside her uterus, specifically in her abdomen, a condition known as ectopic pregnancy.
— Historic Vids (@historyinmemes) August 17, 2023
Huang needed to undergo surgery to… pic.twitter.com/ttu8ARl0jj
இதனால், ஹுவாங் அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல், இறந்த கருவை 60 ஆண்டுகள் தனது வயிற்றில் சுமந்துள்ளார். அந்த இறந்த சிசுவின் மீது கால்சியம் பதிவுகள் உருவானதன் காரணமாக, வயிற்றிலேயே அது கல் போல மாறியுள்ளது. இறுதியாக, கல்லாக மாறிய அந்த சிசுவை 60 ஆண்டுகளுக்குப் பின், கடந்த 2009-ம் ஆண்டில், ஹுவாங்கிற்கு 92 வயதானபோது, அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். இது குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
from International https://ift.tt/EhL5bwr
via
