இந்தியா மற்றும் சீனா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. சீனா இந்திய நிலப்பரப்பை அபகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் எல்லையில் இந்தியா தேவைக்கு அதிகமான படைகளை குவித்திருக்கிறது. அதேசமயம் மனிதாபிமான உதவிகளை இரு நாடுகளும் ஒருவருக்கொடுவர் செய்து கொள்ள தயங்குவதில்லை. சீனாவில் இருந்து யுஏஇ நாட்டுக்கு ஆராய்ச்சி கப்பல் சென்று கொண்டிருந்தது. அக்கப்பல் மும்பையில் இருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் சென்ற போது அக்கப்பலில் பயணம் செய்த ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
மாரடைப்பு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. உடனே உதவி கேட்டு சீன கப்பலில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது. இது குறித்து மும்பையிலுள்ள கடலோர பாதுகாப்பு ஒருங்கிணை மையத்திற்கு தகவல் கிடைத்தது. அத்தகவல் கிடைத்ததும், உடனே அந்தக் கப்பலுடன், கடற்படை அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். முதல் கட்டமாக போன் மூலம் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 17-ம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று சீன கப்பல் இருந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடலில் மிகவும் மோசமான சீதோஷண நிலை காணப்பட்டது. இதனால் ஹெலிகாப்டரில் சென்று கப்பலில் இருந்த நோயாளியை மீட்பது மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும் இந்திய கடற்படையினர் மிகவும் இரட்டான சூழ்நிலையில் மாரடைப்பு ஏற்பட்ட சீன பிரஜையை மீட்டனர். என் வெய்யாங் என்ற அந்த நோயாளியை இந்திய கடற்படை அதிகாரிகள் மீட்டு, அவருக்கு தேவையான முதலுதவி சிகிச்சையை வழங்கினர். அதனைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சீன பிரஜையை தக்க நேரத்தில் காப்பாற்றியதற்கு இந்தியாவில் உள்ள சீன தூதரகம் இந்தியாவை பாராட்டியிருக்கிறது.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from International https://ift.tt/s3zhB6X
via
