இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியில் கடந்த ஒரு மாதத்தைக் கடந்தும் தொடரும் போரில் 11,200-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் 4,100-க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். உணவு, தண்ணீர், மருத்துவ வசதி, எரிபொருள், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளின்றி, காஸா பகுதி மக்கள் பெரும் சோகத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், இஸ்ரேலின் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, ஐ,நா, உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் தங்களின் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து, போர் நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்தன.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிலும், ஈரான், சிரியா, உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் பெரும் திரளான மக்கள் இஸ்ரேலைக் கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனாலும், 'ஹமாஸை அழிக்கும் வரை போர் நிறுத்தப்படாது' என இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில், இஸ்ரேல் ராணுவம் காஸாவைச் சுற்றிவளைத்து தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. ஹமாஸ் குழு மருத்துவமனைகளுக்குக் கீழே தங்கியிருப்பதாகக் கூறி பெருமளவில் மருத்துவமனைகளைச் சேதப்படுத்துகிறது.
நோயாளிகள் மருத்துவமனைக்குள் செல்ல முடியாமலும், மருத்துவமனையிலிருந்து வெளியேயும் வரமுடியாமல் அங்கேயே சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த நோயாளிகளை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. பாலஸ்தீனப் பகுதிகளில் உள்ள உலக சுகாதார அமைப்பு, "குறைந்தது 2,300 நோயாளிகள், பாதிக்கப்பட்டவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் இருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "காஸாவின் பிரதான மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட வேண்டும். காஸாவில் இருக்கும் அல்-ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற சூழலில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கித் தவிப்பதாக உலக மருத்துவ தொண்டு குழுவான MSF தெரிவித்திருக்கிறது. மருத்துவமனைகளில் போர் நடப்பதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை. நாங்கள் நோயாளிகளைப் பாதுகாக்கவும், மருத்துவமனைகள் பாதுகாக்கப்படுவதையும் விரும்புகிறோம். நாங்கள் இது குறித்து இஸ்ரேலிய அரசுடன் பேசியுள்ளோம். எனவே, மருத்துவமனை விவகாரத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என நம்புகிறேன்... அதையே எதிர்பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from International https://ift.tt/xSU0pJQ
via
