அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) சகோதரியும், அமெரிக்க முன்னாள் நீதிபதியுமான 86 வயது மரியானே ட்ரம்ப் பாரி (Maryanne Trump Barry) உயிரிழந்ததையடுத்து, போலி செய்திகள் அவரை இரக்கமின்றி பின்தொடர்ந்தாக, அமெரிக்க ஊடகங்களை மறைமுகமாக குற்றம்சாட்டியிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.
முன்னதாக, மேற்று முன்தினம் அதிகாலை நான்கு மணியளவில், மரியானே தனது வீட்டில் இறந்து கிடந்திருக்கிறார். அதேசமயம், அவரின் வீட்டில் அசம்பாவிதம் நடந்தது என்பதற்கான தடயங்கள் எதுவும் இல்லை. அதோடு, அவரின் இறப்புக்கான காரணம் குறித்து எதுவும் தகவல் வெளியிடப்படவில்லை.
மறைந்த மரியானேவை, முதன்முதலாக 1983-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் (Ronald Reagan), நியூஜெர்சியின் அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார். அதைத்தொடர்ந்து, 1999-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் கிளிண்டன் (Bill Clinton), மூன்றாவது சுற்றுக்கான அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக மரியானேவை நியமித்தார். இருப்பினும், 2019-ல் வரிகளைத் தவிர்ப்பதற்கான திட்டம் தொடர்பான புகாரின் மீது தவறான நடத்தை விசாரணையை எதிர்கொண்டதால் தன்னுடைய பணியிலிருந்து மரியானே ஓய்வு பெற்றார்.
இன்னொருபக்கம், ட்ரம்ப் ஆலோசனை கேட்கும் சில நபர்களில் இவரும் ஒருவர் என்கிற அளவுக்கு ட்ரம்ப்ம்புக்கு நெருக்கமானவர் மரியானே. இருப்பினும், ட்ரம்ப் அதிபராக இருந்த சமயத்தில், அவரது ஆட்சியின் கடைசி ஆண்டு 2020-ல் ட்ரம்பின் மருமகள் மேரி ட்ரம்ப், ட்ரம்ப் குறித்து மரியானே விமர்சித்துப் பேசிய ஆடியோவை வெளியிட்டது சர்ச்சையானது. அந்த ஆடியோவில், `ட்ரம்ப்பை கொடூரமானவர், அவருக்கென்று கொள்கைகள் இல்லை. அவரை நம்ப முடியாது' என்று மரியானே விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மறைந்த சகோதரி மரியானேக்கு நேற்று அஞ்சலி செலுத்திய ட்ரம்ப், போலி செய்திகள் தனது சகோதரியை இரக்கமின்றி பின்தொடர்ந்ததாகக் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து, ட்ரம்ப் தனது சமூக வலைதளமான தளமான ட்ரூத் சோஷியலில் (Truth Social), ``அதிபர் தேர்தலில் நான் போட்டியிடும் வரை, என் சகோதரியின் வாழ்க்கை பெரும்பாலும் பிரச்னைகளில்லாமல் சரியாக இருந்தது. அதன் பிறகுதான், அவரின் வாழ்க்கையை கடினமானதாக மாறியது. போலி செய்திகளும், மற்றவர்களும் இரக்கமின்றி அவரைப் பின்தொடர்ந்தனர். அதனால், 2016 முதல் தான் ஓய்வுபெறும் வரை பெரும் துன்பத்துக்கு ஆளானார் அவர்" என்று பதிவிட்டிருந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from International https://ift.tt/oKw50Br
via
