மும்பை அருகே மொகாடா என்ற இடத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்து வந்த சமீர்(45) என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மும்பை முழுவதும் சிறு போதைப்பொருள் வியாபாரிகளுக்கு போதைப்பொருளை சப்ளை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சமீரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித்தகவல்கள் கிடைத்து இருக்கிறது. இது குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சமீர் இதற்கு முன்பு ஐதராபாத்தில் கெமிக்கல் தொழிற்சாலையில் வேலை செய்த அனுபவம் பெற்றவர். சீனாவில் இருந்து கெமிக்கல்களை இறக்குமதி செய்வது தொடர்பான முன் அனுபவங்களையும் பெற்றார்.
அந்த அனுபவங்களை பயன்படுத்தி சீனாவில் இருந்து கெமிக்கல்களை இறக்குமதி செய்து போதைப்பொருள் தயாரித்து இருப்பது தெரிய வந்தது. ஆன்லைன் மூலம் குறைந்த கட்டணத்தில் கெமிக்கல்களை டெலிவரி செய்யும் நிறுவனங்களை தேடினார். இறுதியில் சீனா நிறுவனம் இந்தியாவை சேர்ந்த ஏஜென்ட் மூலம் கெமிக்கல்களை குறைந்த கட்டணத்தில் சப்ளை செய்வதாக தெரிவித்தது. இதையடுத்து அந்நிறுவனத்துடன் சமீர் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்நிறுவனத்திடம் போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் முக்கிய கெமிக்கலை நேரடியாக தனது பெயருக்கு வரவழைத்தால் தெரிந்துவிடும் என்று கருதி ரத்னகிரியில் உள்ள தனது நண்பர் பெயருக்கு அனுப்ப சொல்லி இருக்கிறார்.
அங்கிருந்து அதனை சாலை மார்க்கமாக மும்பைக்கு கொண்டு வந்துள்ளார். அதற்கு தேவையான பணத்தை ஹவாலா முறையில் சமீர் கொடுத்துள்ளார். இது போன்ற பரிவர்த்தனைகள் மற்றும் பேச்சுவார்த்தைக்கு புதிய போன் நம்பரை பயன்படுத்தி வந்துள்ளார். பார்க்க மிகவும் எளிமையாக காட்சியளிக்கும் சமீர் தனது போதைப்பொருள் தொழிற்சாலையில் போதைப்பொருளை தயாரித்து அதனை தனது இரு சக்கர வாகனத்தில் கொண்டு வருவார். அவற்றை பயந்தரை சேர்ந்த கெளதம் கோஷ் என்பவரிடம் கொடுத்துள்ளார்.
கெளதம் கோஷ் போதைப்பொருளை சிறிய பாக்கெட்களாக மாற்றி மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் இருக்கும் போதைப்பொருள் வியாபாரிகளிடம் விற்பனை செய்துள்ளார். சமீருக்கு சீனாவில் இருந்து கெமிக்கல்களை சப்ளை செய்த ஒருவர் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி இருக்கிறார். அவரை இவ்வழக்கில் சாட்சியாக மாற்றி இருக்கிறோம்'' என்று தெரிவித்தார். கடந்த மாதம் 21ம் தேதி பயந்தர் லாட்ஜ் ஒன்றில் போலீஸார் ரெய்டு நடத்தி 4 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் இது வரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from International https://ift.tt/JZP5bGo
via
