100 பில்லியன் டாலருக்கு உரிமையாளரனா முதல் பெண் என்ற பெருமையை ஃபிராங்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் (Francoise Bettencourt Meyers) என்பவர் பெற்றுள்ளார்.
ப்ளூம்பெர்க் வியாழன் அன்று வெளியிட்ட பில்லியனர்கள் இன்டெக்ஸ் அறிக்கையின்படி, உலகின் பில்லியனர்கள் பட்டியலில் 12-வது பணக்காரராக ஃபிராங்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் இடம்பிடித்துள்ளார்.
சமீபத்தில் இவரது சொத்து மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்துள்ளது.
யார் இந்த ஃபிராங்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ்?
ஃபிராங்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸுக்கு 70 வயது ஆகிறது. 114 வருடங்களாக இயங்கி வரும் `L'Oreal SA’ நிறுவனத்தை 1909-ல் இவரின் தாத்தா யூஜின் ஷுல்லர் தொடங்கினார். 1998-ல் இருந்து இந்நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிறுவனத்தின் தலைவராக இப்போது ஃபிராங்கோயிஸ் இருக்கிறார். இவரின் குடும்பத்தினர் இந்த அழகு பிராண்ட் வர்த்தகத்தில் 35% பங்குகளை வைத்திருந்தனர். ஃபிராங்கோயிஸ் ஒரே மகள் என்பதால் அவரின் அம்மா லிலியன் பெட்டன்கோர்ட் 2017-ல் இறந்தவுடன் அவரது சொத்துகளை ஃபிராங்கோயிஸ் பெற்றார்.
ஃபிராங்கோயிஸ் தன் அம்மாவுடன் இணக்கமாக இருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருவருக்குமான மனக்கசப்பு நீதிமன்ற சண்டையாக வலுத்தது. ஏனெனில், அவர் அம்மா தன் நண்பருக்குப் பரிசளிக்க, சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் திருடியதாக ஃபிராங்கோயிஸ் குற்றம் சாட்டியிருந்தார். தன் அம்மாவால் குடும்ப பணத்தைக் கையாள முடியுமா என்ற கேள்வியையும் நீதிமன்றத்தில் எழுப்பி இருந்தார்.
இவர்களின் குடும்ப தகறாரை நெட்ஃப்ளிக்ஸ் `The Billionaire, The Butler, and The Boyfriend’ என்ற பெயரில் வெளியிட்டு இருந்தது.
ஃபிரான்கோயிஸ் ஓர் எழுத்தாளரும்கூட. இவருக்கு பியானோ இசைப்பது மிகவும் பிடித்த ஒன்று. மணிக்கணக்கில் பியானோவை தினம் வாசிப்பாராம்.
பிற பில்லியனர்களைப்போல அல்லாமல் தேடப்படும் முகமாகவே ஃபிராங்கோயிஸ் இருக்கிறார். சமூக வாழ்வை தவிர்த்து, பர்சனலாக வாழ்ந்து வருகிறார்.
இவருக்கு 37 மற்றும் 35 வயதில், ஜீன் விக்டர் மேயர்ஸ் மற்றும் நிக்கோலஸ் மேயர்ஸ் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவருமே இயக்குநர்கள்.
வாழ்த்துகள் ஃபிராங்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ்!
from International https://ift.tt/1brBdPD
via
