`ஆண் ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்காக பெண் ஊழியர்கள் மிதமாக மேக்கப் போட்டு வர வேண்டும்’ என கூறிய நிறுவனம் ஒன்று கண்டனங்களைப் பெற்று வருகிறது.
சீனாவின் ஷென்சென் நகரைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில், நவம்பர் 30 அன்று குரூப் சாட் ஆப் `WeChat’-ல், லுவோ என்ற நிர்வாக அதிகாரி மெசேஜ் செய்யத் தொடங்கியுள்ளார். அந்த குரூப்பில் ஐந்து பெண் ஊழியர்களும் இருந்துள்ளனர்.
`குழுவை ஊக்கப்படுத்தும் வகையில், பெண்கள் டிசம்பரில் இருந்து வேலை செய்ய வருகையில், லைட்டாக மேக்கப் அணிந்து வர வேண்டும்.
இந்தக் கோரிக்கையை ஏற்பதற்காக பெண்களுக்கு மதியம் டீ குடிப்பதற்கு, எங்கள் ஆண்கள் க்ரவுட் ஃபண்ட் செய்வார்கள்' என்று மெசேஜ் செய்துள்ளார்.
குழுவில் உள்ளவர்கள் இதற்கு சில நிமிடங்கள் வரை ஏதும் ரிப்ளை செய்யாமல் இருந்துள்ளனர். அந்தச் சமயத்தில், `இது முக்கியமான விஷயம், இந்த மெசேஜை பார்த்தவர்கள் உடனடியாக பதிலளிக்க வேண்டும்; இல்லையென்றால் உங்களது பர்ஃபார்மென்ஸுக்கான போனஸ் குறையும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் நண்பரும், சோஷியல் மீடியா இன்ஃப்ளுயன்சருமான ஒருவர் இதனைத் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் போஸ்ட் செய்ய, இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
பலரும் கண்டங்களைத் தெரிவித்த நிலையில் அவரிடம் கேள்வியெழுப்பப் பட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை லுவோ மறுக்கவில்லை. அதனை ஒப்புக்கொண்டவர், `அது ஒரு ஜோக், அதனை ரிமூவ் செய்துவிட்டேன்’ என்று அலட்சியமாகக் கூறியுள்ளார்.

அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 300 ஊழியர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள். இந்த ஊழியர்கள் தங்கள் வேலையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதால் பெண் ஊழியர்களின் தேவையை நிறுவனம் பெரும்பாலும் புறக்கணிக்கிறது.
`ஊழியர்கள் நேரிலும், குரூப் சாட்டிலும் அடிக்கடி நகைச்சுவையாகப் பேசுவது நிறுவனத்தின் கலாசாரத்தை உள்ளடக்கியது தான்’ என்று லுவோ கூறியிருக்கிறார்.
தன் தரப்பு வாதத்தை லுவோ கூறினாலும், `ஆண்கள் மேக்கப் போட்டு வந்து குழுவை மோட்டிவேட் செய்யலாமே'? என நெட்டிசன்கள் கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.
ஆண் ஊழியர்களை மோட்டிவேட் செய்ய பெண் ஊழியர்கள் லைட் மேக்கப் போட்டு வர வேண்டும் என்பது குறித்து உங்களின் கருத்தென்ன? கமென்டில் சொல்லுங்கள்!
from International https://ift.tt/d3T7qUK
via
