அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி சார்லஸ் சென்னட் - எலிசபெத் சென்னட். சார்லஸ் சென்னட் தன் மனைவியுடனான கருத்துவேறுபாடு காரணமாக அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார். அதற்காக கென்னத் யூஜின் ஸ்மித், ஜான் பார்க்கர் ஆகிய இருவரிடமும் தலா 1000 டாலர் வழங்கி, தன் மனைவியைக் கொலை செய்ய கேட்டிருக்கிறார்.
இருவரும், 1988-ம் ஆண்டு எலிசபெத் சென்னட்டை கொலை செய்தனர். எலிசபெத் சென்னட் கொலை செய்யப்பட்ட ஒரு வாரத்தில் சார்லஸ் சென்னட் தற்கொலை செய்துக்கொண்டார். கொலை குற்றம்சாட்டப்பட கென்னத் யூஜின் ஸ்மித், ஜான் பார்க் ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் இருவருக்கும் மரணதண்டனை விதித்தது. இதில், ஜான் பார்க்கர்க்கு 2010-ல் ஊசி மூலம் மரண தண்டனை வழங்கப்பட்டது. 2022-ம் ஆண்டு கென்னத் யூஜின் ஸ்மித் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது மரண ஊசி போடுவதற்கான நரம்பை கண்டுபிடிப்பதில் ஏற்பட்ட சிக்கலால், மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், நேற்று நைட்ரஜன் ஹைபோக்ஸியாவால் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நைட்ரஜன் ஹைபோக்ஸி மரண தண்டனை:
நைட்ரஜன் ஹைபோக்ஸியா மரண தண்டனை என்பது, மரண தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு ஒரு முகமூடி அணிவிக்கப்படும். அதில் நைட்ரஜனை மட்டுமே சுவாசிக்கும்படியான அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். மனித வாழ்வுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனை தவித்து நைட்ரஜனை தொடர்ந்து சுவாசிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, மூச்சுத்திணறல் ஏற்படும். அதைத் தொடர்ந்து மரணம் நிகழும். இந்த மரண தண்டனையால் கைதிக்கு பெரும் சிரமங்கள் இருக்காது எனக் கூறப்படுகிறது.
கென்னத் யூஜின் ஸ்மி மரணிக்க சுமார் 22 நிமிடங்கள் ஆனதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. இதற்கு முன்னர், 1999-ம் ஆண்டு ஹைட்ரஜன் சயனைடு வாயுவைப் பயன்படுத்தி ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது, நைட்ரஜனை வைத்து முதன்முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்படிருக்கிறது. இதுபோன்ற மரண தண்டனைக்கு அமெரிக்க மனித உரிமை வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடதக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from International https://ift.tt/O05mBzr
via
