அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் பிரைன் ஸ்பெஷர் (32). இவருக்கு ஓமெலியா (26) எனும் நண்பர் இருந்தார். பிரைன் ஸ்பெஷர், ஓமெலியாவின் வீட்டில் தங்கியிருந்தார். 2018 மே 27-ம் தேதி, இருவரும் இணைந்து, கஞ்சாவைப் புகைத்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, மறுநாள் வீட்டின் வாசல் வழியே ரத்தம் வழிந்திருப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
அப்போது, பிரைன் ஸ்பெஷர் கையில் கத்தியும், அவர் உடலில் சில கத்திக்குத்துக் காயங்களும் இருந்தன. அருகிலிருந்த ஓமெலியா சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது. கொலைசெய்யப்பட்ட ஒமெலியாவின் உடலில் சுமார் 108 கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன. இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பிரைன் ஸ்பெஷரை நீதிமன்றம் தற்போது விடுத்திருக்கிறது.
இது தொடர்பாகப் பேசிய வழக்கறிஞர்கள், ``பிரைன் ஸ்பெஷர், தன் காதலனைக் கத்தியால் குத்தியபோது, கஞ்சாவால் தூண்டப்பட்ட மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய செயல்களில் அவருக்கே கட்டுப்பாடு இல்லை. அதனால்தான் அவரும் பலமுறை தன்னைத்தானே குத்திக்கொண்டார். எனவே இது மனநோயாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே அவர் இரண்டு ஆண்டுகள் சிறையிலிருந்திருக்கிறார்.
எனவே, தற்போது நன்னடத்தை காரணமாக, 100 மணிநேரம் சமூக சேவை செய்ய வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் சிறைத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்." என்றனர்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, கலவையான விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறது. உயிரிழந்த ஓமெலியாவின் தந்தை, ``கலிபோர்னியாவில் மரிஜுவானா புகைக்கும் அனைவருக்கும் ஒருவரைக் கொல்ல நீதிமன்றம் உரிமை வழங்கியிருக்கிறது" என விமர்சித்திருக்கிறார்.
from International https://ift.tt/MXuAWVC
via
