அருணாச்சலப் பிரதேச சிறுவனைச் சீனா இந்தியாவிடம் ஒப்படைத்த நிலையில், ஆக்கிரமிப்பு நிலம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
मीराम तारौन को चीन ने वापस लौटा दिया है ये जानकर तसल्ली हुई।
— Rahul Gandhi (@RahulGandhi) January 28, 2022
जिस भारत भूमि पर चीन ने कब्ज़ा किया है वो कब वापस मिलेगी, प्रधानमंत्री जी? https://t.co/33RmBPyoSB
அருணாச்சல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்திற்குட்பட்ட ஜிடோ கிராமத்தைச் சேர்ந்தவர் மிரம் டாரோன் . இவர் சீனாவின் எல்லைக்கு அருகே உள்ள பகுதிக்கு வேட்டையாடச் சென்றபோது சீன ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். அவரை சீன ராணுவம் கடத்திக்கொண்டு சென்றதாகக் கூறப்பட்டது. சீன ராணுவத்திடமிருந்து சிறுவனை மீட்க ராகுல் காந்தி வலியுறுத்தி இருந்தார்.
Also Read: `கண்டுகொள்ளாத தி.மு.க; கலங்கும் காங்கிரஸ்?!' -ராகுல்காந்தி வருகையின் `சமரச' பின்னணி
இந்நிலையில் அந்த சிறுவன் வழித்தவறி அவர்களுடைய பகுதிக்கு வந்து விட்டதாகக் கூறி சிறுவனை இந்திய ராணுவத்திடம் சீனா ஒப்படைத்தது. சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட உரியச் சிகிச்சை அளித்து வருவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”மிரம் டாரோனை திருப்பி அனுப்பியது ஆறுதலாக இருக்கிறது. ஆனால் சீனா ஆக்கிரமித்துள்ள இந்திய நிலத்தை எப்போது திரும்பப் பெறுவீர்கள் பிரதமரே?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தில், இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவம், அங்கு ஒரு குட்டி கிராமத்தையே உருவாக்கியிருக்கும் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அதன் மீது இந்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததற்கு எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகள் வைத்ததன் தொடர்ச்சியாகவே ராகுல் காந்தி இப்படி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
from International https://ift.tt/3GarlYv
via
